செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிpt desk

”என்னை சந்திக்க தவிர்ப்பதற்கான காரணத்தை செங்கோட்டையனிடமே கேளுங்கள்” - டென்ஷன் ஆன இபிஎஸ்!

செங்கோட்டையன் தன்னை சந்திப்பதை தவிர்ப்பதற்கான காரணத்தை அவரிடம் சென்று கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: சந்தான குமார்

வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்....

மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்:

இந்தியா கூட்டணி என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ஸ்டாலின் அந்தக் கூட்டணியால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன். தமிழ்நாடு மக்களைப் பற்றி திமுகவுக்கு கவலை இல்லை. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு பற்றி மற்ற மாநில தலைவர்களை அழைத்துள்ளார்கள். மற்ற மாநிலத் தலைவர்களிடம் மும்மொழி கொள்கை கோரிக்கையை ஏன் வைக்கவில்லை. அதை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்களெல்லாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார்.

சேங்கோட்டையன் என்னை சந்திக்க தவிர்ப்பதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்:

சேய்தியாளர்கள் அவரிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உங்களை தவிர்க்க என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்... என்னை சந்திக்காமல் தவிர்ப்பதற்கான காரணத்தை செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள், காரணம் என்னவென்று அவரை கேட்டால் தான் தெரியும், என்னை கேட்டால் என்ன தெரியும். ஏன் தவிர்த்தார் என அவரை போய் கேளுங்கள், அவரிடம் கேட்டால் தான் தெரியும், இதெல்லாம் தனிப்பட்ட பிரச்னைகளை கேட்கும் இடம் இதுவல்ல என்று தெரிவித்தார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் தனி பாதையில் பயணிக்கும் செங்கோட்டையன்?

அதிமுக சுதந்திரம் தரும் கட்சி, திமுக போன்று அடிமை ஆட்கள் இங்கு கிடையாது:

இங்கு என் பின்னால் பாருங்கள், இங்கு கூட நிறைய பேர் வரவில்லை, அவர்கள் ஏன் வரவில்லை என கேட்க முடியுமா?. அவரவர்களுக்கு வேறு வேலை இருக்கும். அதிமுக சுதந்திரம் தரும் கட்சி, திமுக போன்று அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. நான் திருமணத்திற்கு செல்கிறேன் அங்கு அவர் கலந்து கொள்ளவில்லை, இவர் கலந்து கொள்ளவில்லை என எழுதுகிறார்கள். நான் என்றும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை, நான் அதிமுகவின் சாதாரண தொண்டன். நான் தலைவன் இல்லை, திமுக போன்று வாரிசு அரசியல் இங்கு இல்லை, குடும்பக் கட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சி இங்கு இல்லை.

cm stalin
cm stalinpt desk
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
”தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு தவறானது” - பவன் கல்யாண்!

ஆரசியலில் எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்:

அதிமுகவில் அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம், யாரும் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செல்லலாம், யாரும் கேட்பதில்லை. எந்த கட்சியிலும் இல்லாத சுதந்திரம் அதிமுகவில் உள்ளது, எங்கள் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள், எந்த தடையும் இல்லை..எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com