ஜெயலலிதா அறையில் முதலமைச்சர்..

ஜெயலலிதா அறையில் முதலமைச்சர்..

ஜெயலலிதா அறையில் முதலமைச்சர்..
Published on

முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதன்முறையாக ஜெயலலிதா அறைக்கு சென்று தனது பணியை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு வார காலமாக நிலவி வந்த அசாதாரண சூழல் முடிவுக்கு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வென்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.15 மணிக்கு தலைமைச்செயலகம் சென்றார். அதன்பின், ஜெயலலிதா அறைக்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். முக்கியமான ஐந்து கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார்.இதற்கு முன்பு பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி வகித்த போது, அவர் ஜெயலலிதா அறையையும், அங்கிருந்த பொருட்களையும் பயன்படுத்தியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com