விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது என்று இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

நடிகர் விவேக் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து கேட்டு வேதனையடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தது. 

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பு. கலைச்சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com