எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

“காவல்துறை மனதுவைத்தால் மட்டுமே மாணவ மாணவிகளை காக்க முடியும்” எடப்பாடி பழனிசாமி

“நேர்மையான காவல் துறை அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே மாணவ, மாணவிகளை அழிவில் இருந்து காக்க முடியும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மெத்தனப் போக்கால் சென்னையில் உள்ள வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி PT WEB

குடிசைப் பகுதிகளை குறிவைத்து போதைப் பொருள் வியாபாரத்தை நடத்திய நபர்கள், தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளை தங்களின் வியாபார கேந்திரமாக மாற்றியுள்ளது மிகவும் அபாயகரமானது என்றும், இதுபோன்ற செயல்கள் அங்குள்ள குழந்தைகள், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துவிடும் எனவும் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
”எங்கள் உழைப்பு, பணம் எல்லாம் விரயம்” நாதகவில் தொடரும் அதிருப்தி! விழுப்புரம் மாவட்ட நிர்வாகி விலகல்

நேர்மையான காவல் துறை அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே மாணவ, மாணவிகளை அழிவில் இருந்து காக்க முடியும் என குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகார போதையில் இருக்கும் திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com