'கம்முனு இரு...'- செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாக கத்திய இபிஎஸ்-ன் முழு உரை!

'கம்முனு இரு...'- செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாக கத்திய இபிஎஸ்-ன் முழு உரை!
'கம்முனு இரு...'- செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாக கத்திய இபிஎஸ்-ன் முழு உரை!

சட்டப்பேரவையில் சபாநாயகர் மூலமாக ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று காட்டமாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தொடருவதற்கான அனுமதியை தமிழக சட்டப்பேரவை தலைவர் கொடுத்துள்ள நிலையில் அதிமுக நேற்று அமலியில் ஈடுபட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

ஆர்பி உதயகுமார் மற்றும் அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அதிமுக சார்பில் பதவிகள் வழங்குவதற்கான கோரிக்கை மனுவை கடந்த இரண்டு மாதங்களாக சட்டப்பேரவை தலைவரிடம் கொடுக்கப்பட்டு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



இந்நிலையில் அதிமுகவின் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக தளவாய் சுந்தரம் மற்றும் ஆதிராஜாராம் ஆகியோர் காவல் துறை அனுமதி கேட்ட நிலையில் அதற்கான அனுமதியை சென்னை மாநகர காவல் தரவில்லை. இருப்பினும் அதிமுக போராடி வருகிறது. மேலும் பாதுகாப்பிற்காக வள்ளுவர் கோட்டம் பகுதியில் தற்போது 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இதில் போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் பேசுகையில், “பொய்யானது சட்டப்பேரவையில் சபாநாயகர் மூலமாக ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை 2 மாதங்களாக சபாநாயகர் கிடப்பில் போட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல், எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினோம். சட்டப்பேரவை தலைவரிடம் அனைத்து ஆதரங்களையும் அவரிடம் நாங்கள் எப்போதோ கொடுத்து விட்டோம். உண்மைக்கு புறம்பாக செயல்படுகின்றனர்'' என்று  எடப்பாடி பழனிச்சாமி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அவர் செய்தியாளர்களை பார்த்து 'ஏங்க இருங்க..! கம்முனு இரு' என கையை நீட்டி பயங்கர கோபத்தில் கத்தினார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



சென்னை வள்ளூவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இபிஎஸ் உள்ளிட்டோரை கைது செய்யும்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான், ஓ பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துக்கொண்டு அதிமுக-வை அழிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றார் என்றும், நேற்றைய தினம்கூட ஓ பன்னீர்செல்வத்துடன் முதல்வர் ஸ்டாலின் சுமார் 30 நிமிடங்களுக்கு பேசி இருந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டியை முழுமையாக கீழேயுள்ள காணொலியில் காணுங்கள்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com