epspt desk
தமிழ்நாடு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ‘எதிரிகளை வெல்லக்கூடிய’ சிறப்பு அர்ச்சனை செய்த இபிஎஸ்!
தமிழக எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் திரிசதி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேட்டரி கார் மூலம் சண்முக விலாஸ் மண்டபத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
epspt desk
இதனையடுத்து கோவிலில் உள்ள சூரசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி அர்ச்சனை செய்தார். மேலும் மூலவர், சண்முகர் வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி, எஸ்பி.சண்முகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.