தமிழ்நாடு
பிரதமர் வேட்பாளர் - “நாங்க சொல்றது இருக்கட்டும்.. முதல்ல நீங்க சொல்லுங்க!” திமுகவிற்கு இபிஎஸ் கேள்வி
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான பலமான கூட்டணி அமையும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அதிமுக 52ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை, திமுக நிறுத்தியுள்ளதாக சாடினார். திமுக சொன்ன வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்றும் கூறிய எடப்பாடி பழனிசாமி, அதற்கு முன்னோட்டமாக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என தெரிவித்தார். பின்னர் பிரதமர் வேட்பாளர் யாரென முதலில் திமுக கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.