தமிழ்நாடு
கூட்டணி தொடர்பான கேள்வி: “இதுதான் நிலைமை” ஒரு வார்த்தையில் இபிஎஸ் பதில்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான். மற்ற எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. வாக்குகளை சிதறவிடாமல் அதை ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்துவதுதான் அதிமுகவின் தலையாய கடமை. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக இருக்கிறது.
ADMK
பாஜக குறித்தெல்லாம் இன்னும் 6 மாதங்கள் கழித்து கேளுங்கள். ஊகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தற்போது இதுதான் நிலை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே” எனத் தெரிவித்தார்.