“ஸ்கிரிப்ட மாத்துப்பா.. கதையையும் மாத்து” - உதயநிதிக்கு அட்வைஸ்; திருச்சியில் மாஸ்காட்டிய இபிஎஸ்!

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பிரசாரத்தை குறிப்பிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கூட்டணியின் முதல் பரப்புரையை திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எப்போது பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொள்கிறார். அதைத்தான் மூன்று வருடங்களாக காட்டிக்கொண்டிருக்கிறார். செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை. விளம்பரத்திற்காக செங்கல்லை காட்டுகிறார். ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா.. கதைய மாத்து. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திமுக எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்? 38 எம்.பிகள் 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 3 ஆண்டுகளாக செங்கல்லை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” என தெரிவித்தார். பொதுக்கூட்டம் முழுவதையும் காண

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com