ஆலோசனைக் கூட்டத்தில் மோடிக்கு அருகில் உட்கார வைக்கப்பட்ட இபிஎஸ்.. பின்னணி என்ன?

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 38 கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

delhi meeting
delhi meetingtwitter

இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் அதிமுகவிற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. குறிப்பாக கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கவும் கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில், அவருக்கு அருகிலேயும் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது.

அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக பிரதமர் மோடியை வரவேற்க, எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com