முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் இன்று திறக்கிறார்

முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் இன்று திறக்கிறார்

முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் இன்று திறக்கிறார்
Published on

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள இந்த பரிசோதனை மையம் முழுவதுமாகக் குளிரூட்டப்பட்டுள்ளது. எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. 60 விதமான பரிசோதனைகளுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்தபட்சக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

65 பரிசோதனைகளுக்கான டைமண்ட் திட்டத்தில் 2 ஆயிரம் ரூபாயும், 70 பரிசோதனைகளுக்கான பிளாட்டினம் திட்டத்திற்கு 3 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எலும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்ள முடியும். முழு உடல் பரிசோதனைகளுக்காக 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com