\
கே.பி.அன்பழகனின் வீட்டிற்குச் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி

கே.பி.அன்பழகனின் வீட்டிற்குச் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி

கே.பி.அன்பழகனின் வீட்டிற்குச் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி
Published on

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்துப் பேசினார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றிரவு தருமபுரி அருகே கெரகோட ஹள்ளியில் உள்ள அன்பழகனின் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர்களான வீரமணி, முல்லைவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்களான கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com