\
திமுக அமைச்சர்களில் 8 பேர் முன்னாள் அதிமுகவினர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக அமைச்சர்களில் 8 பேர் முன்னாள் அதிமுகவினர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக அமைச்சர்களில் 8 பேர் முன்னாள் அதிமுகவினர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Published on
திமுக அரசின் அமைச்சரவையில் இருக்கும் 8 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருடன் வாலாஜாவில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், திமுக எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முன்னாள் அதிமுகவினர் என்று சுட்டிக்காட்டினார். தி.மு.க.வில் அனைவரும் வயதாகிவிட்டதால், அதிமுகவில் இருப்பவர்களை வாடகைக்கும் விலைக்கும் வாங்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். திமுக அரசுககு சரியான தலைமையும் நிர்வாகத் திறமையும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com