\
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
Published on

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரை தேர்வுசெய்ய 3 மணிநேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தின்போது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. கடந்த 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டம் தற்போது நிறைவுபெற்றது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com