
வடகிழக்கு பருவமழைக்கு முன் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இன்று நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பருவமழையின் போது இடர்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் பொதுமக்கள் சேவைக்காக சில தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1913
கட்டுப்பாட்டு அறை: 044-2536 7823, 2538 4965 / 3694
வாட்ஸ்ஆப் எண்கள்: 94454 77662, 94454 77205