\
ஈபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து பங்கேற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

ஈபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து பங்கேற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

ஈபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து பங்கேற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
Published on

அரியலூரில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமியுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்கிறார். 

அரியலூரில் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் பன்னீா் செல்வமும் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் படத்தை திறந்து வைத்து, ரூ.5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கின்றனர். மேலும் ரூ.69.06 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் செய்யவுள்ளனர். மேலும் அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் இருவரும் அவர்களை கவுரவிக்கவுள்ளனர். 

அதிமுகவில் இரு அணிகள் இணைந்து நடைபெறும் முதல் விழா என்பதால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிளக்ஸ் பேனா்கள், அலங்கார வளைவுகள், வைத்துள்ளதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் அரியலூா் நகரில் பெரும்பாலான சாலைகளும், மற்றும் முக்கிய புறவழிச் சாலைகளும் தலைவர்களை வரவேற்பதற்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பல்வேறு முக்கிய அறிவுப்புகள் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com