“மக்களுக்கும் பாதுகாப்பில்லை... போலீஸூக்கும் பாதுகாப்பில்லை” - பேரவையில் இபிஎஸ் வேதனை

“மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலை மிகவும் வேதனைக்குறியதாக உள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிFile Photo

இன்று நடந்த காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “நாட்டில் நடக்கக்கூடிய குற்றச் சம்பவங்களை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படும் என்பதால், இந்த அவையில் சில தகவல்களை சொல்கிறோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட வேண்டும்; குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும்; உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாமானிய மக்கள் அச்சமின்றி வாழ முடியும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை, மக்களை காக்க வேண்டிய காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலை மிகவும் வேதனைக்குறியதாக உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிக்கிறது. வன்முறைகளும் அதிகரித்து வருகிறது.

பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விநியோகம், வழிபறி, கொலை, கொள்ளை, பொருளாதார குற்றம், மோசடி போன்றவைகள் உயர்ந்துக்கொண்டே போகிறது.

முன்கூட்டியே குற்றங்களை கண்டறியும் நுண்ணறிவுப் பிரிவு, செயலிழந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கொள்கை விளக்கக் குறிப்பின்படி 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலா 1,597 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் ஒரே எண்ணிக்கையிலான கொலைகள் நடந்திருப்பது வியப்பை அளிக்கிறது. குடிபோதை தகராறுகளில் கொலைகள் 147-ஆக அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது” என்றார்.

மேலும் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டியும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியும் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக கூறினார் இபிஎஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com