”சர்வாதிகாரமாக செயல்படுகிறார்”..வேட்பு மனு தாக்கல் செய்த ஈபிஎஸ்..நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்

”சர்வாதிகாரமாக செயல்படுகிறார்”..வேட்பு மனு தாக்கல் செய்த ஈபிஎஸ்..நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்

”சர்வாதிகாரமாக செயல்படுகிறார்”..வேட்பு மனு தாக்கல் செய்த ஈபிஎஸ்..நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்

வேட்பு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளார் பதவிக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெரும் நிலையில், இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஈபிஎஸ் மனுவை முன்மொழிந்தது - மாவட்ட செயலாளர்கள்!

திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார், கேபி அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜூ, பரஞ்சோதி, சூ ரவி, ஆகியோர் ஆவர்.

இதனை வழிமொழிந்த மாவட்ட செயலாளர்கள்!

செல்லூர் ராஜு, ஓஎஸ் மணியன், சி விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பாலகங்கா, எஸ்.பி. சண்முகநாதன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆவர்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பாக ஒ.பன்னீர் செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஈபிஎஸ் - ஓபிஎஸ் விமர்சனம்

”இதுவரை கழக சட்ட விதிகளை பின்பற்றி தான் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஒரு சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அந்த விதிகளை அனைத்தையும் மாற்றி தானும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு மட்டும் பதவி கொடுக்கிறார். எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். இது, நாசகார கூட்டம். திருந்து திருந்து என்கிறோம், திருந்தவில்லை. தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர அனைத்து வேட்பாளர்களையும் அவரே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுத்தார். ஆனால், அதை பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை..” என்றார்.

”தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமாக வில்லை... குண்டர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது... சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தினகரனோ தனி கட்சி நடத்துகிறார். இது குறித்து இரு தரப்பும் முடிவெடுக்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ் தரப்பு.. ஆலோசனையில் ஈபிஎஸ் தரப்பு..

பொது செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமை உருவாக்கியது தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

இந்த அவசர முறையிட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு நாளை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக நாளை காலை 10 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com