திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.
காரில் திருமலை சென்ற அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் ரங்கநாதர் மண்டலத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின் அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தார். பேடி ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே கூடியிருந்த நிருபர்களிடம், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு வந்துள்ளதால் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை என கூறிச் சென்றார்

