புதிய மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்த முயற்சி - செந்தில்பாலாஜி மீது ED குற்றச்சாட்டு

விசாரணையை தாமதப்படுத்தும் விதமாக புதிது புதிதாக மனுக்களை செந்தில் பாலாஜி தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
செந்தில்பாலாஜி வழக்கு-அமலாக்கத்துறைக்கு
செந்தில்பாலாஜி வழக்கு-அமலாக்கத்துறைக்கு pt desk

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் புதிதாக 3மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தன் மீதான மோசடி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கில் உத்தரவை ஒத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், வங்கி ஆவணங்களில் விடுபட்டவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

 senthil balaji
senthil balajipt desk

இந்தவழக்கு நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இந்த மனுக்கள் மீது வாதிட கால அவகாசம் வழங்க கூடாது எனவும், வாதங்களை உடனே கேட்டு முடிவு செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி வழக்கு-அமலாக்கத்துறைக்கு
”8 முறை தமிழகத்திற்கு மோடி வந்தபோதும் பாடம் புகட்டியது திராவிட மண்” - மக்களவையை அலறவிட்ட ஆ.ராசா!

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com