”எத்தனைத் தடைகள் வந்தாலும் எனது பணிகள் தொடரும்” - ED சோதனைக்கு பின் விசிகவின் ஆதவ் அர்ஜூனா ட்வீட்!

விசிக துணைப் பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2ஆவது நாளாக நடைபெற்றுது. அதேநேரம் மற்ற இடங்களில் சோதனை நிறைவுபெற்றது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா, கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் அடிப்படையில் சென்னை போயஸ்கார்டன், கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் வழங்கும், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை நிறைவுபெற்றது.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புகளில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஒப்பந்த நிறுவனமான அருணாச்சலம் இம்பேக்ஸ்-சில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

சோதனை முடிந்த பின்னர், “எனது அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனை முடிந்தது. எத்தனைத் தடைகள் வந்தாலும் எனது பணிகள் தொடரும்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com