தமிழ்நாடு
சென்னை: PFI அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் வீட்டில் ED Raid!
சென்னையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அந்த அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த முகமது இஸ்மாயிலின் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் நேற்று காலை 9 மணி முதல் காவல் துறையினர் பாதுகாப்போடு ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். இச்சோதனை முடிவில், அவரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

accused housept desk
ஏற்கனவே SDPI கட்சியின் தலைவர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அந்தக் கட்சியோடு தொடர்புடைய தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.