\
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் நிகழ்ச்சி: விசாரணைக்கு உத்தரவு

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் நிகழ்ச்சி: விசாரணைக்கு உத்தரவு

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் நிகழ்ச்சி: விசாரணைக்கு உத்தரவு
Published on

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிக்ழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விசாரிக்க, கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சென்னை வந்திருந்தார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி நாகர்கோவிலில் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடத்த அனுமதித்தது எப்படி என்று விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் இதற்கு எப்படி அனுமதியளிக்கப்பட்டது என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மண்டல இயக்குனர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிப்பார் என்று தெரிகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com