லாக்கர்களை உடைக்கும் அமலாக்கத்துறை! பரபரப்பாகும் அமைச்சர் பொன்முடியின் இல்லம்!

விழுப்புரத்தில் பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோ, லாக்கர்களை உடைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் பூட்டு திறக்கும் நபரை வரவழைத்துள்ளனர்.
MinisterPonmudi
MinisterPonmudipt web

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை தொடங்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சட்டவிரோதமாக உரிமம் வழங்கி குவாரிகளை இயக்கியதாகவும், அதன் மூலம் 2,64,644 லாரிகளில் செம்மண் எடுத்து விற்பனை செய்து, அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாயை வருவாய் இழப்பு செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

MinisterPonmudi 
EDRaid
MinisterPonmudi EDRaidptweb

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வரும் சூழலில், விழுப்புரத்தில் உள்ள வீட்டில் பீரோ, லாக்கர்களின் சாவி இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் பூட்டுகளை திறக்கும் நபர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 4 மணி நேரமாக சோதனை நடந்து வரும் சூழலில், அலுவலகமாக செயல்படும் முதல் தளத்தில் காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 12 மணியளவில் இரண்டாம் தளத்தை திறந்து அவரது இல்லத்திலும் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

MinisterPonmudi
அமைச்சர் பொன்முடியின் பூட்டிய வீடு முன் காத்திருந்த ED அதிகாரிகள்! விழுப்புரத்தில் என்ன நடந்தது?
MinisterPonmudi
MinisterPonmudi

அப்போது அங்கிருக்கக்கூடிய அலமாரிகள், பீரோக்கள், லாக்கர்களின் சாவிகள் இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் அதிகாரிகள் பூட்டு திறக்கும் நபரை வரவழைத்துள்ளனர். லாக்கர்களில் சந்தேகத்திற்கு இடமான ஆவணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதால் லாக்கர்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com