சென்னை உயர்நீதிமன்றம் - அமலாக்கத்துறை - தேவநாதன் யாதவ்
சென்னை உயர்நீதிமன்றம் - அமலாக்கத்துறை - தேவநாதன் யாதவ்கோப்புப்படம்

“தி மயிலாப்பூர் இந்து நிதி நிறுவன விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை” - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை!

தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தேவநாதன்
தேவநாதன்pt web

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி முதலீட்டாளர்கள் நலச்சங்க தலைவர் சதீஷ்குமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் - அமலாக்கத்துறை - தேவநாதன் யாதவ்
சென்னையில் புயல் கரையைக் கடக்கும் இடம் என்ன? பிரதீப் ஜான் முக்கியத் தகவல்

அப்போது, ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com