செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன?

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று பிற்பகலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் அவர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிபுதிய தலைமுறை

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது சரியானது தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்த நிலையில், அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதால், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
நீலச்சட்டை, தாடியுடன் செந்தில் பாலாஜி; புழல் சிறையிலிருந்து விசாரணைக்கு அழைத்துவந்தது அமலாக்கத்துறை!

இந்நிலையில் அமலாக்கக் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பிற்பகலில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு 200 கேள்விகள் தயார் செய்து வைத்துள்ள அமலாக்கத்துறை?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com