பொருளாதார மந்த நிலையே ஆட்குறைப்புக்கு காரணம் - இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகி

பொருளாதார மந்த நிலையே ஆட்குறைப்புக்கு காரணம் - இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகி
பொருளாதார மந்த நிலையே ஆட்குறைப்புக்கு காரணம் - இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகி

இந்திய பொருளாதார மந்த நிலையே இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கான காரணம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் செயற்குழு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ‘தேர்டு ஐ’ (Third i) எனப்படும் கணினி அறிவியல் பயன்பாட்டு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் செயற்குழு துணைத் தலைவர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தனராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிதான் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கான காரணம். மேலும் இத்தகைய நடவடிக்கை தற்காலிகமானது தான், பொருளாதாரத பின்னடைவு சரி செய்யப்பட்டால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சி அடையும். இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் வருகையால் கோவை, சென்னை போன்ற பல்வேறு நகரங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

தொழில் வளர்ச்சி என்பது அரசினுடைய ஆதரவு இருந்தால் மட்டுமே நடைபெறும். எனவே அரசு தொழில் நிறுவனங்கள் மீதான அதிக முதலீடுகளையும், தொடர் பங்களிப்பையும் கொடுப்பது வளர்ச்சிக்கான பாதையாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் தொழில்நுட்ப படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com