``உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது நாங்களில்லை”- அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

``உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது நாங்களில்லை”- அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்
``உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது நாங்களில்லை”- அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக-வினர் அராஜகம் செய்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதுதொடர்பான இன்று காலை 8.30 மணிக்கு ட்வீட்டில் பதிவிட்டிருந்த அவர், அதனுடன் வீடியோவொன்றை இணைத்து, “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்ததாக திமுக அரசு கூறி வரும் நிலையில், வாக்குப்பதிவு நாளில் தமிழகம் கண்ட முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களின் நீட்சியை இந்தக் காணொளித் தொகுப்பு காட்டுகிறது!” என்று கேப்ஷன் போட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, 22-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளிலும், இதேபோல இந்திய தேர்தல் ஆணையம் தனது கண்களை மூடிக்கொண்டிருக்காது என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் திமுக அரசு தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.இந்தக் காணொளி, தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்! இந்திய தேர்தல் ஆணையம், தன் கண்களை மூடிக் கொள்ளாமல் நாளையாவது விழிப்புடன் இருப்பார்களா?” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம், வேறொரு அதிகாரிகள் குழுவுக்குதான் இருக்கிறது. அதாவது மாநில தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.  அரசியலமைப்பு சட்டப்பிரிவு 243 கே மற்றும் 243 இசட்.ஏ. ஆகிய பிரிவுகளின் கீழ் மாநில தேர்தல் ஆணையம் அதை செய்யும். ஆகவே இந்த தேர்தல் தொடர்பான உங்களுடைய சந்தேகங்கள் அல்லது புகாரை நீங்கள் மாநில தேர்தல் ஆணையத்தை அணுகலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த ட்வீட்டை மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அண்ணாமலை தனியாக ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com