மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம்
Published on

நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி, விருப்பமனுக்கள், பரப்புரைகள் என தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்து, தொகுதி பங்கீடையும் நிறைவு செய்யும் தருவாயில் உள்ளன. 

அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. அதேசமயம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியில் தலைவர் கமல் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பேட்டரி டார்ச் சின்னம் மிகப்பொருத்தமானது . தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும் பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும் என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com