\
தொடர் மழை எதிரொலி: ஆர்ப்பரித்துக் கொட்டும் கும்பக்கரை அருவி

தொடர் மழை எதிரொலி: ஆர்ப்பரித்துக் கொட்டும் கும்பக்கரை அருவி

தொடர் மழை எதிரொலி: ஆர்ப்பரித்துக் கொட்டும் கும்பக்கரை அருவி
Published on

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் வட்டகணல் உள்ளிட்ட பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது.

இதனால் கடந்த இரண்டு தினங்களாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று இரவும் தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து சிறிது வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com