வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க பாரதிய ஜனதா, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.