தமிழ்நாடு
பட்ஜெட்டுக்குப் பிரச்சினை இல்லை: தேர்தல் ஆணையம்
பட்ஜெட்டுக்குப் பிரச்சினை இல்லை: தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்சினை இல்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால், வரும் 16ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டுக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் ஏதேனும் ஆட்சேபனை எழும் பட்சத்தில் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியுள்ளது.