\
ஜெ.வின் பணி‌யை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் சிறப்பாக தொடர்வார்கள் : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா

ஜெ.வின் பணி‌யை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் சிறப்பாக தொடர்வார்கள் : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா

ஜெ.வின் பணி‌யை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் சிறப்பாக தொடர்வார்கள் : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக தொடர்வார்கள் என்று எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா தெரிவித்துள்ளார்.  

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் உட்பட பல்வேறு விதங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா, பேரன் ராமச்சந்திரன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேசிய சுதா, கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருந்த இரும்புப் பெண்மணி ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணி‌யை, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சிறப்பாக தொடர்வார்கள் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் இரட்டை இலை சின்னமும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினருக்கு கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் சுதா கூறினார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com