மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றிய ஊழியர் - இருளில் மூழ்கிய கிராமம்

மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றிய ஊழியர் - இருளில் மூழ்கிய கிராமம்

மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றிய ஊழியர் - இருளில் மூழ்கிய கிராமம்
Published on

திருச்சி அருகே பஞ்சாயத்து மின்கட்டணம் செலுத்தாதால் மின் ஊழியர் தெரு விளக்குகளை கழற்றிச் சென்றுள்ளார். இதனால் இரவில் தெருக்கள் இருளில் மூழ்கிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் ஆதனூர் கிராமம் உள்ளது. இங்குள்ள நாயக்கர் தெருவில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட வயதானோரும் வசித்து வருகின்றனர். திடீரென்று வந்த மின்சார ஊழியர்கள் இந்தப்பகுதி எந்தப் பஞ்சாயத்தின் கீழும் வரவில்லை என்றும், மின்கட்டணம் செலுத்தவில்லை எண்றும் கூறி தெரு விளக்குகளை கழற்றி சென்றுவிட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மின் ஊழியரிடம் கேட்டபொழுது ஆதனூர் பஞ்சாயத்து தலைவர் பாலம்மாள், தெரு விளக்கு மின்கம்பங்கள் எங்கள் பஞ்சாயத்தில் வரவில்லை என கூறியதால் நடவடிக்கை எடுத்துள்ளோம் என தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இரவு நேரத்தில் தீப்பந்தம் கொளுத்தி அந்த பகுதி மக்கள் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தங்களது அடையாள அட்டைகளை அரசுக்கே திருப்பி அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com