16 வகை உணவுகள்... 20 நிமிடங்களில் சாப்பிடணும்! ஈரோட்டில் களைகட்டிய சாப்பாடு போட்டி!

ஈரோடு அருகே புதிய உணவக திறப்பு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
சாப்பிடும் போட்டி
சாப்பிடும் போட்டிpt web

செய்தியாளர் - ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் பாபு என்பவர் புதிதாக உணவகம் ஒன்றை திறந்திருக்கிறார். உணவக திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் "சாப்பிடும் போட்டி" நேற்று அங்கு நடத்தப்பட்டது.

போட்டியின்படி, 500 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து கொண்டு பிரியாணி, மீன், முட்டை, நாட்டுக்கோழி, சிக்கன் சில்லி, வாத்துகறி உட்பட மொத்தம் 16 வகையான உணவுகளை 20 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்கவேண்டும்.

வெற்றி பெற்றால் முதல் பரிசாக ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 800 ரூபாயும் மூன்றாம் பரிசாக 500 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டியில் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொள்வதற்காக போட்டியாளர்கள் பலரும் முதல் நாள் இரவு முதல் நேற்று மதியம் வரை சாப்பிடாமல் இருந்துவிட்டு, போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்ட நபர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. வெற்றி பெறாதவர்களுக்கும்கூட, அந்தச் சூழல் கொண்டாட்டமான மனநிலையை கொடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com