\
ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
Published on: 

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் சென்னை சாந்தோம் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. நாகை‌ மாவட்டம் வேளாங்கண்ணியில், நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது, பட்டாசுகள் வெடித்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி புனித பனி மய மாதா தேவாலாயத்தில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையுடன் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில், ஜென்மராக்கினி ஆலயம், இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர் ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com