”அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும்..” - அரசியல் தலைவர்கள் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளனர்.
Vijay, Annamalai, OPS
Vijay, Annamalai, OPSpt desk

உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ வாழ்த்துகள் - நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது X வலைதள பக்கத்தில் ஈஸ்டர் வாழத்துச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துகள் - அண்ணாமலை

அதேபோல் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”இயேசுபிரான், சக மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே தியாகம் செய்து, மீண்டும் உயிர்ந்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நம்பிக்கையை உருவாக்கும் இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்

”பகைவரிடத்திலும் அன்பு காட்டும் இரட்சகரான இயேசுபிரான் கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில் உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசுபிரான் போதித்த தியாகம், பாவ மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com