சென்னையில் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது

சென்னையில் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது

சென்னையில் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது
Published on

சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை கடலுக்கடியில் ரிக்டரில் 5.1 புள்ளிகள் நிலஅதிர்வு உணரப்பட்டது.

சென்னையில் இன்று காலை 7 மணியளவில் வடகிழக்கு கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1  அலகுகளாக பதிவானதாக, இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com