தமிழ்நாடு
தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு
தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு
நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் அருகாமை பகுதிகளான சிந்தாமணி மற்றும் வடகரை ஆகிய கிராமங்களில் நேற்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நேற்றிரவு 8 மணி 47 நிமிடத்திற்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 15 வினாடிகள் அது நீடித்திருக்கிறது. நில அதிர்வு ஏற்பட்டதால் பதறிப்போன மக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓடி தெருக்களில் கூடி நின்றனர். பின்னர் சில மணி நேரங்கள் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லவே பயந்தனர்.
இதேபோல் தென்காசியை ஒட்டியுள்ள கேரள எல்லைப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கேரள மாநிலத்தில் புனலூர், ஆரியங்காவு, தென்மலை வரை திடீர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

