தமிழ் இனம் நன்றி சொல்லும்: பெரியார் தின வாழ்த்து கூறினார் கமல்
தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தொண்டு செய்து பழுத்த பழம்.. தூய தாடி மார்பில்விழும்.. மண்டைச் சுரப்பை உலகம் தொழும்.. மனக்குகையில் சிறுத்தை எழும்” என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு பிரச்சாரம் என தன் வாழ்நாள் முழுக்க சமூக சீர்த்திருந்த செயல்களில் கழித்தவர் அவர். திராவிட இன உணர்வை மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்றது இவரது சிறப்பு. ஆகவேதான் ‘பகுத்தறிவு பகலவன்’ என்றும், ‘தந்தை பெரியார்’ என்றும் பட்டம் கொடுத்து மக்கள் இவரை அழைத்தனர்.
பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் அவர் “அவர் செயலை, உணர்வை நினைவை போற்றுவோம். 1879, செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” எனப் பதிவிட்டுள்ளார்.