\
DVAC May Expand Probe to Senior DMK Ministers After EV Velu
லஞ்ச ஒழிப்புத்துறைPt web

எ.வ. வேலுக்குவுக்கு பிறகு., லஞ்ச ஒழிப்புத் துறை குறிவைக்கும் திமுக முக்கிய நிர்வாகிகள்!

லஞ்ச ஒழிப்புத் துறை திமுக வடக்கு மண்டல தளபதி எ.வ.வேலுவை தொடர்ந்து, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சேகர் பாபு, மூர்த்தி, அன்பில் மகேஸ் ஆகிய முக்கிய தலைவர்களையும் குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

திமுகவின் வடக்கு மண்டல தளபதியான எ.வ.வேலுவை தொடர்ந்து, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சேகர் பாபு, மூர்த்தி, அன்பில் மகேஸ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வடக்கு மண்டல திமுக பொறுப்பாளரான எ.வ.வேலு, திமுகவின் முக்கியமான ‘கருவூலம்’. கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை என இருபெரும் துறைகளை நிர்வகித்தவர். 7ஆவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எ.வ. வேலு, தற்போது திமுக சட்டமன்ற கொறடாவாகவும் இருக்கிறார்.

எ.வ. வேலு
எ.வ. வேலுPt web

மேற்கு மண்டல திமுக தளபதியாக இருக்கும் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்துவந்திருந்தாலும் திமுக தலைமையின் உள்ளம் கவர்ந்தவர்களில் ஒருவர். கட்சிப் பணியோடு, களப் பணியிலும் கில்லாடி. 3 முறை அமைச்சர், 5ஆவது முறை எம்.எல்.ஏவாக இருக்கும் பாலாஜி, ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணையையும், கரூர் சம்பவத்துக்காக சிபிஐ விசாரணையையும் சந்தித்தவர்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மத்திய மண்டலமான திருச்சியின் அடையாளமாக கருதப்படுபவர் திமுக முதன்மை செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு. 3 முறை அமைச்சராக இருந்ததுடன், 6வது முறையாக எம்எல்ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நேரு. தேர்தல் மாநாடுகளுக்கு பெயர் பெற்றவர். திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவர்களில் ஒருவரான அன்பில் மகேஸ், உதயநிதிக்கும் மிக நெருக்கமானவர்.

DVAC May Expand Probe to Senior DMK Ministers After EV Velu
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் விவகாரம்.. திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்.. அனுமதி மறுப்பு!

2015இல் இளைஞர் அணி துணை அமைப்பாளராக திமுகவில் களம் இறங்கிய அன்பில் மகேஸ், 2 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலராக பொறுப்பு வகிக்கிறார். கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருபவர் என மு.க. ஸ்டாலினால் பாராட்டப்பட்டவர்.

திமுக
திமுகPt web

மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரான மூர்த்தி. கடந்த ஆட்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த மூர்த்தி, திமுகவின் ‘அசையும் சொத்துக்களில்’ ஒருவர்.

திமுக முதன்மை குடும்பத்துக்கு நெருக்கமானவரான சேகர் பாபு, அறநிலையத் துறையுடன், சிஎம்டிஏ பொறுப்பையும் வகித்தவர். வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலரான சேகர் பாபு, 5ஆவது முறை எம்.எல்.ஏவாக தொடர்கிறார். அறநிலையத் துறையுடன், சிஎம்டிஏ பொறுப்பையும் வகித்தவர். வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலரான சேகர் பாபு, 5ஆவது முறை எம்.எல்.ஏவாக தொடர்கிறார்.

DVAC May Expand Probe to Senior DMK Ministers After EV Velu
முதல்வர் தலைமையில் IAS, IPS மாநாடு.. ”எங்கள் விமர்சனம் தவெகவுக்கு வலுசேர்க்கவே” - ஆர்.பி. உதயகுமார்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com