\
அரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்

அரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்

அரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்
Published on: 

அரசு டாஸ்மாக் கடையில் தரமற்ற முறையில் மதுபானம் விற்கப்படுவதாக நாகையில் மது குடிப்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில் வாங்கியுள்ளார். தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான அந்த மதுபாட்டிலுக்குள், வெள்ளை நிறத்தில் பசைபோன்று ஏதோ இருந்துள்ளது. இதை கண்ட அவர் திறக்கப்படாத மதுபாட்டிலுக்குள் ஏதோ இருக்கிறதே என்று அதிர்ச்சியடைந்தார். 

அத்துடன் அந்த மதுபாட்டிலை திறக்காமல் வைத்துள்ளார். தற்போது அந்த மதுபாட்டில் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. அரசு டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது தரமற்ற முறையில் இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com