தாய், மனைவிக்கு சிலை வைத்த காவலர் விபத்தில் திடீர் மரணம் - துர்கா ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தாய், மனைவிக்கு சிலை வைத்த காவலர் விபத்தில் திடீர் மரணம் - துர்கா ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தாய், மனைவிக்கு சிலை வைத்த காவலர் விபத்தில் திடீர் மரணம் - துர்கா ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Published on

மயிலாடுதுறையில் வீட்டிலேயே தாய், மனைவிக்கு சிலை அமைத்து பிரசித்திபெற்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் மறைந்த தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாளுக்கு வீட்டின் வாசலிலேயே சிலை அமைத்து வழிபட்டு வந்ததன் மூலம் இப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி தனது 73-வது பிறந்தநாளை தனது தாய், மனைவியின் சிலை முன்பு கொண்டாடினார். மேலும் இவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துணைவியாரின் உறவினர் ஆவார்.

இந்நிலையில், இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற மதன்மோகன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மதன்மோகனின் உடல் மயிலாடுதுறையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், தமிழக அரசு கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதாமுருகன் ராஜகுமார் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com