அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின் - அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

ஆலங்குடியில் தான் போட்டியிட்டு அரசியலில் அமைச்சராக உயர்வதற்கு காரணம் துர்கா ஸ்டாலின்தான் என தனது சொந்த ஊரான திருவெண்காடு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
Meyyanathan
Meyyanathanpt desk

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அங்கு பேசிய அவர்...

Grama Sabha
Grama Sabhapt desk

" இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இரண்டாவதாக ஆலங்குடியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் கொடுத்தார்.

அதற்கு முழு காரணம் அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள்தான். மீண்டும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்து அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமாணவர் துர்கா ஸ்டாலின். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை அவர்கள் எனக்கு ஏற்படுத்தி தராமல் இருந்திருந்தால் எனது அரசியலே திசைமாறி போயிருக்கும்.

அப்படி நாங்கள் பெரிதும் மதிக்கின்ற அவர்கள் பிறந்த மண்ணில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com