நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டார்.
லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் துலாக்கட்டத்தில் காவிரியில் நீராடி வருகின்றனர். விடுமுறை தினமான இன்று அதிகாலையிலிருந்தே மக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால், போதிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லை. போதிய போலீசார் இல்லாததால், கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகளும், முதியவர்களும் அவதிக்கு ஆளாகினர்.
இந்தநிலையில், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆகியோர் நேரடியாக துலாக்கட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காவிரி மகா புஷ்கரம் நடைபெற்று வரும் துலாக்கட்டத்தில் இன்று வழிபாடு நடத்தினார்.

