திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா – துர்கா ஸ்டாலின் தரிசனம்

சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
Durga stalin
Durga stalinpt desk

செய்தியாளர்: மோகன்ராஜ்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலம்) கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் அகோர மூர்த்தி உள்ளிட்ட மும் மூர்த்திகளாக காட்சி தரும் இத்தளத்தில் மூன்று தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் இந்திர பெருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

துர்கா ஸ்டாலின் தரிசனம்
துர்கா ஸ்டாலின் தரிசனம்pt desk

இந்நிலையில், 12 ஆம் நாள் திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், தெப்பக் குளத்தில் வலம் வந்து சுவாமி அம்பாளை மனமுருக வழிபட்டார். இவ்விழாவில் திருவெண்காடு மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com