\
durga stalin
durga stalinpt desk

ஆடி பௌர்ணமி: காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!

ஆடி பௌர்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தமிழ்நாடு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
Published on: 

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சியம்பாள் திருக்கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நேற்று மாலை அம்பாளுக்கு பல்வேறு பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்
காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்

இதில் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு அம்பாளை சிறப்பு தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயிலின் சிறப்புகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், சாமி தரிசனத்துக்குப்பின் கோயிலை வலம் வந்தார் அவர். அதன் பின் பூஜை பொருட்களுடன் வளையல் மற்றும் மஞ்சள் புடவைகள் வைத்து அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தார்.

அம்பாளுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அர்ச்சனைகள் செய்த பின் தீபாராதனையில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலினுக்கு, நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள் பட்டுப் புடவை, வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com