பழனி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!

பழனி முருகன் கோயிலில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலமாக சென்றார். அங்கு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின் ரோப் கார் மூலமாக மலைக் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

durga stalin
durga stalinpt desk

தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com