இன்பநிதிக்கு அடிக்கப்பட்ட சுவரொட்டி.. துரைமுருகன் எடுத்த அதிரடி நடவடிக்கை!

புதுக்கோட்டையில் இன்பநிதி பெயரில் சுவரொட்டி ஒட்டிய இருவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி புகைப்படத்துடன், புதுக்கோட்டையில் ’இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்தோடு போஸ்டரொன்று ஒட்டப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை நகர்ப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் ’வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்’ என குறிப்பிடப்பட்டு, பாசறை நிர்வாகிகள் என்ற பெயரில் திமுகவைச் சேர்ந்த இருவர் புகைப்படங்கள் இருந்தன. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை ஒட்டிய நிர்வாகிகள் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள்மீது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com