’திருவள்ளுவர் பல்கலை. இரண்டாக பிரிப்பதா?’- பேரவையில் துரைமுருகன் Vs முதல்வர் காரசார வாதம்

’திருவள்ளுவர் பல்கலை. இரண்டாக பிரிப்பதா?’- பேரவையில் துரைமுருகன் Vs முதல்வர் காரசார வாதம்
’திருவள்ளுவர் பல்கலை. இரண்டாக பிரிப்பதா?’- பேரவையில் துரைமுருகன் Vs முதல்வர் காரசார வாதம்

திருவள்ளுவர் பல்கலைகழகத்தை 2 ஆக பிரிப்பதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை 2 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் விழுப்புரத்தில் விரைவில் புதிய பல்கலைகழகம் திறக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதையடுத்து கேள்வி நேரத்தின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திருவள்ளுவர் பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை.

கருணாநிதி கொண்டு வந்ததற்காக இவ்வாறு செய்கிறீர்களா? இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள். ஏற்கனவே ஒன்றும் இல்லாத பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது சரியானதல்ல. இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவே இல்லை. எனது தொகுதியான காட்பாடி தொகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தை பிரிப்பதை குறித்து என்னிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, “கல்விக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே பல்கலைகழகம் பிரிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் தான் பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல அரசுக்கு எந்த காழ்புணர்ச்சியும் இல்லை. மாணவர்கள் அதிகளவில் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டால் அதே பெயர் இருக்குமா ? என துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் பல்கலைக்கழகத்திற்கு புதிய பெயர் விரைவில் வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com